Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

65. Power of Speech

சொல்வன்மை

Wealth (பொருட்பால்) · Ministers of State (அமைச்சியல்) · kurals 641–650
Kural number
Show beside each kural
“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று”
— திருக்குறள் 641 · சொல்வன்மை

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

“ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.”
— திருக்குறள் 642 · சொல்வன்மை

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”
— திருக்குறள் 643 · சொல்வன்மை

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.”
— திருக்குறள் 644 · சொல்வன்மை

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.”
— திருக்குறள் 645 · சொல்வன்மை

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

“வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.”
— திருக்குறள் 646 · சொல்வன்மை

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”
— திருக்குறள் 647 · சொல்வன்மை

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.”
— திருக்குறள் 648 · சொல்வன்மை

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

“பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.”
— திருக்குறள் 649 · சொல்வன்மை

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

“இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.”
— திருக்குறள் 650 · சொல்வன்மை

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.