Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

49. Knowing the fitting Time

காலமறிதல்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 481–490
Kural number
Show beside each kural
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.”
— திருக்குறள் 481 · காலமறிதல்

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.”
— திருக்குறள் 482 · காலமறிதல்

Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

“அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.”
— திருக்குறள் 483 · காலமறிதல்

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

“ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.”
— திருக்குறள் 484 · காலமறிதல்

Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.

“காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.”
— திருக்குறள் 485 · காலமறிதல்

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

“ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.”
— திருக்குறள் 486 · காலமறிதல்

The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.

“பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.”
— திருக்குறள் 487 · காலமறிதல்

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.”
— திருக்குறள் 488 · காலமறிதல்

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

“எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.”
— திருக்குறள் 489 · காலமறிதல்

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”
— திருக்குறள் 490 · காலமறிதல்

At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.