Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

24. Renown

புகழ்

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 231–240
Kural number
Show beside each kural
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.”
— திருக்குறள் 231 · புகழ்

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

“உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.”
— திருக்குறள் 232 · புகழ்

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.”
— திருக்குறள் 233 · புகழ்

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.”
— திருக்குறள் 234 · புகழ்

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.”
— திருக்குறள் 235 · புகழ்

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
— திருக்குறள் 236 · புகழ்

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.”
— திருக்குறள் 237 · புகழ்

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.”
— திருக்குறள் 238 · புகழ்

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.”
— திருக்குறள் 239 · புகழ்

The ground which supports a body without fame will diminish in its rich produce.

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.”
— திருக்குறள் 240 · புகழ்

Those live who live without disgrace. Those who live without fame live not.