“இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.”
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
ஊடலுவகை
“இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.”
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
“ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.”
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
“புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.”
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
“புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.”
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
“தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.”
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
“உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.”
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.”
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
“ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.”
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
“ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.”
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.”
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.