Skip to content

வாழ்க தமிழ்வளர்க தமிழ்பரவட்டும் தமிழ்

Thamizh Koodam — Where Tamil tradition comes together

Pongal Wishes in Tamil

பொங்கல் வாழ்த்துகள்

Pongal is the Tamil harvest festival, celebrated at the start of the month of Thai to thank the sun, the land and the cattle that help bring in the harvest. As the pot of new rice and milk boils over, families call out “Pongalo Pongal!” and share sweet pongal with everyone around them.

Here are Pongal wishes in Tamil with English meanings — for family, friends and elders, plus short lines for a WhatsApp status. As the old saying goes, “Thai pirandhal vazhi pirakkum”: when Thai is born, a way forward is born too.

  1. தை பிறந்தால் வழி பிறக்கும்! இந்தத் தைத்திருநாள் உங்கள் வாழ்வில் புதிய வழிகளைத் திறக்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    When Thai is born, a way is born! May this Thai festival open new paths in your life. Happy Pongal!

    WhatsApp
  2. பொங்கலோ பொங்கல்! பொங்கும் பொங்கலைப் போல உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    Pongalo Pongal! Just as the pongal boils over, may happiness overflow in your home.

    WhatsApp
  3. உழவர் உழைப்பைப் போற்றுவோம், இயற்கைக்கு நன்றி சொல்வோம்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    Let us honour the farmers’ hard work and give thanks to nature! Warm Pongal wishes to everyone.

    WhatsApp
  4. உலகுக்கு ஒளி தரும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் இந்த நன்னாளில், உங்கள் வாழ்வும் ஒளிமயமாகட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    On this good day when we thank the sun that gives light to the world, may your life shine bright too. Happy Pongal!

    WhatsApp
  5. சர்க்கரைப் பொங்கலின் இனிப்பும் கரும்பின் சுவையும் போல உங்கள் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்!

    Like the sweetness of sakkarai pongal and the taste of sugarcane, may your life always be sweet!

    WhatsApp
  6. நம் உழவுக்கு உயிரான மாடுகளைப் போற்றும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்! வீடும் தொழுவமும் செழிக்கட்டும்.

    Mattu Pongal wishes, honouring the cattle that are the lifeblood of our farming! May home and cattle shed both prosper.

    WhatsApp
  7. நெல் விளைந்து களஞ்சியம் நிறைய, பால் பொங்கிப் பானை வழிய, உங்கள் இல்லம் என்றும் செழிக்கட்டும்!

    With paddy ripening to fill the granary and milk boiling over the pot, may your home always flourish!

    WhatsApp
  8. பெரியோர்களின் ஆசியுடன் இந்தத் தைத்திருநாளைக் கொண்டாடுகிறோம். தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம். இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    We celebrate this Thai festival with the blessings of our elders. We pray to God that you always live in good health. Happy Pongal!

    WhatsApp
  9. தைமகளை வரவேற்போம்! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    Let us welcome Thai, the maiden month! Warm Pongal wishes.

    WhatsApp
  10. புதுப் பானை, புது அரிசி, புதுத் தொடக்கம்! இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    A new pot, new rice, a new beginning! Happy Pongal.

    WhatsApp
  11. பழையன கழிதலும் புதியன புகுதலும்! போகியுடன் கவலைகள் விலகி, மகிழ்ச்சி பிறக்கட்டும்.

    Out with the old, in with the new! With Bhogi, may worries leave and happiness begin.

    WhatsApp
  12. சொந்தங்கள் கூடி, கோலமிட்டு, பொங்கல் வைத்து மகிழும் இந்தத் திருநாளில் உங்கள் குடும்பம் எல்லா வளமும் பெறட்டும்!

    On this festival when family gather, draw kolams and cook pongal together, may your family be blessed with every abundance!

    WhatsApp